எப்-35
போர் விமானங்கள் · Lockheed Martin F-35 Lightning II
தோற்ற நாடு
அமெரிக்கா
உற்பத்தியாளர்Lockheed Martin Aeronautics, Lockheed Martin
எப்-35 அல்லது லொக்கீட் மார்டீன் எப்-35 மின்னல் II (Lockheed Martin F-35 Lightning II) என்பது ஒரு தனி இருக்கை, தனிப் பொறி, எல்லா காலநிலையிலும் மறைவான, பல்வகைத் தாக்குதல் வானூர்தியாகும். இந்த ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம் தரைத்தாக்குதல் மற்றம் வான் போர் செயற்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இது மூன்று வகைகளைக் கொண்டுள்ளது. எப்-35ஏ மரபுமுறை புறப்படுத்தல் மற்றும் தரையிறக்கத்திற்காகவும், எப்-35பி குறுகிய புறப்படுத்தல் மற்றும் செங்குத்து தரையிறக்கத்திற்காகவும், எப்-35சி விமானந்தாங்கியின் கவண் எறிமுறை புறப்படுத்தல் மற்றும் தடுப்புப் பிடிப்பு திரும்பப்பெறல் முறைக்காகவும் வடிவமைக்கப்பட்டன. 31 சூலை 2015 அன்று, ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு எப்-35பி சோதனையின் பின்னர் முதலாவது படைப்பிரிவு தயாராக உள்ளது என அறிவித்தது. 2 ஆகத்து 2016 அன்று, ஐக்கிய அமெரிக்க வான்படை எப்-35ஏ விமாங்களைக் கொண்ட முதலாவது படைப்பிரிவு சண்டைக்குத் தயார் என அறிவித்தது. இது லொக்கீட் மார்ட்டின் மற்றும் அதன் துணை ஒப்பந்ததாரர்களான நார்த்ரோப் குரூமன், பிராட் & விட்னி மற்றும் பிஏஈ சிஸ்டம்ஸ் உள்ளிடவர்களால் கட்டப்பட்டுகிறது.







