எல்லா வெடிகுண்டுகளினதும் தந்தை
வான் குண்டுகள் · Father of All Bombs
தோற்ற நாடு
ரஷ்யா
"எல்லா வெடிகுண்டுகளின் பிதா" ("Father of All Bombs") என்ற அடை பெயருடைய சக்தி அதிகரிக்கப்பட்ட வான்வியல் வெப்ப அழுத்த வெடிகுண்டு (Aviation Thermobaric Bomb of Increased Power) என்பது வான்வழியாக குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தரையின் செயற்படும் உரசியத் தயாரிப்பு வெப்ப அழுத்த ஆயுதமாகும். இவ்வாயுதத்தின் அழிவு சக்தி பற்றி் குறிப்பிட்ட உருசியக் ஆயுதப் படைகளின் அதிகாரி "உயிர்வாழும் அனைத்துமே சாதாரணமாய் ஆவியாகிவிடும்" என்றார். இது அமெரிக்க இராணுவத்தின் "எல்லா வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் வெடிகுண்டினைவிட நான்கு மடங்கு பலமுள்ளது. இதனால் இது வழக்கமான, அணு ஆயுதங்களற்ற உலகிலுள்ள ஆயுதங்களில் இதுவே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். ஆயினும், உரசியர்களின் உரிமை கொண்டாடும் ஆயுதத்தின் அளவு, சக்தி பற்றி அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ்வாயுதம் 11 செப்டம்பர் 2007 அன்று வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. உரசிய இராணுவத்தின் கூற்றின்படி, இப்புதிய ஆயுதம் சில சிறிய வகை அணுக்குண்டுகளுக்கு மாற்றீடாக அமையும்.
இவ்வாயுதம் 11 செப்டம்பர் 2007 அன்று வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. உரசிய இராணுவத்தின் கூற்றின்படி, இப்புதிய ஆயுதம் சில சிறிய வகை அணுக்குண்டுகளுக்கு மாற்றீடாக அமையும்.







