உலக இராணுவ வலிமை
← அணு ஆயுதங்கள்
ஃபாட் மேன்
U.S. Department of Defense · Public domain · Wikimedia Commons

ஃபாட் மேன்

அணு ஆயுதங்கள் · Fat Man

தோற்ற நாடு அமெரிக்கா
ஃபாட் மேன் (ஆங்கிலம்: Fat Man; கொழுத்த மனிதன்) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும். முதலாவது (சின்னப் பையன்) ஹிரோஷிமா மீது ஆகஸ்ட் 6, 1945 இல் போடப்பட்டது. அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு "ஃபாட் மேன்" என்ற மாதிரியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டன. இது புளுட்டோனியம் கருவைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயுதம் ஆகும்ஃபாட் மேன்' என்பது வின்ஸ்டன் சேர்ச்சிலைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது.

"ஃபாட் மேன்" நிலத்தில் இருந்து 1,800 அடிகள் (550 மீ) உயரத்திலிருந்து "பொக்ஸ் கார்" என்ற பி-29 ரகப் போர் விமானத்தில் இருந்து மேஜர் சார்ல்ஸ் சுவீனி என்ற போர் விமானியால் வீசப்பட்டது. இக்குண்டு கிட்டத்தட்ட 21 கிலோடன்கள் டிஎன்டி, அல்லது 8.78×1013 ஜூல் = 88 TJ அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது. நாகசாக்கி மலைப்பாங்கான பகுதி என்பதால், ஹிரோஷிமாவில் ஏற்பட்ட தாக்கத்துடன் ஒப்பிடும் போட்டு இங்கு சற்றுக் குறைவான விளைவுகளே ஏற்பட்டன. கிட்டத்தட்ட 39,000 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 25,000 பேர் காயமடைந்தனர். இதன் தாக்கத்தினால் பின்னர் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். 6.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
121

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q188163