உலக இராணுவ வலிமை
← இலகு டாங்கிகள்
ஜோராவர் (இலகு ரக பீரங்கி வண்டி)
Government of India · GODL-India · Wikimedia Commons

ஜோராவர் (இலகு ரக பீரங்கி வண்டி)

இலகு டாங்கிகள் · Zorawar

தோற்ற நாடு இந்தியா
ஜோராவர் எல் டி (Zorawar LT), இமயமலை போன்ற மிக உயரமான போர்க்களங்களில், குறிப்பாக லடாக் போன்ற, சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்தியத் தரைப்படையினர் பயன்படுத்துவதற்காக, இந்தியப் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) மற்றும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஒரு இலகு ரக பீரங்கிகளுடன் கூடிய கவச வாகனம் ஆகும். இது குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டத்திலுள்ள துறைமுக நகரான அசிராவில் தயாரிக்கப்படுகிறது.
இதன் முன்மாதிரி பீரங்கி வண்டி 6 சூலை 2024 அன்று வெளியியானது.முதல்கட்டமாக 59 இலகு ரக ஜோராவர் பீரங்கி வண்டிகள் தயாரிக்க இந்திய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. 2027ஆம் ஆண்டிற்குள் 295 ஜோராவர் இலகு ரக பீரங்கி வண்டிகளை செய்யத் திட்டமிட்டுள்ளது.-
25 டன் எடை கொண்ட ஜோராவரின் பீரங்கி வண்டிக்கான 8V199 ரக எஞ்சின் ரோல்ஸ்ராய் நிறுவனம் அக்டோபர் 2024ல் வழங்க உள்ளது.
இந்த இலகு ரக ஜோராவர் பீரங்கி வண்டிகளை உலங்கு வானூர்திகளில் எளிதாக லடாக் போன்ற சீன எல்லைப்புறங்களில் கொண்டு செல்ல முடியும்.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q113876590