சுக்கோய் சு-24
குண்டுவீச்சு விமானங்கள் · Sukhoi Su-24
தோற்ற நாடு
Soviet Union
உற்பத்தியாளர்Sukhoi, Novosibirsk Aircraft Production Association
சுகோய் சு-24 (Sukhoi Su-24, உருசியம்: Су-24, நாட்டோ குறிப்பிடும் பெயர்: "பென்சர்", Fencer) சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து-வானிலை மீயொலிவேக குண்டுவீசு வானூர்தி ஆகும். இந்த வானூர்தியில் மடங்கு-நீட்டு இறக்கை, இரு தாரைப்பொறிகள், அடுத்தடுத்து அமரக்கூடிய இரு இருக்கைகள் சிறப்பம்சங்களாக உள்ளன. இது செலுத்துகை/தாக்குதல் அமைப்பு ஒருங்கிணைந்து எண்ணிம முறைமையில் வடிவமைக்கப்பட்ட முதல் சோவியத் வானூர்தி ஆகும். இந்த படைத்துறை வானூர்தி உருசிய, உக்ரானிய, கசக் வான்படைகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்ட பிற நாட்டு வான்படைகளிலும் சேவையில் உள்ளது.







