ஆர்எஸ்-28 சர்மட்
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் · RS-28 Sarmat
தோற்ற நாடு
ரஷ்யா
உற்பத்தியாளர்Krasnoyarsk machine-building plant
ஆர்எஸ்-28 சர்மட் (RS-28 Sarmat, நேட்டோ அறிக்கையிடல் பெயர்: SS-X-29 அல்லது SS-X-30) என பெரும்பாலும் ஊடகங்களில் சாத்தான் II என்று குறிப்பிடப்படும் இது மூன்று நிலைகள் கொண்ட மேக்யேவ் ஏவூர்தி வடிவமைப்பு பணியகத்தினால் தயாரிக்கப்பட்ட, உருசிய களஞ்சிய அடிப்படையிலான, திரவ-எரிபொருள், அதிமீயொலி சறுக்கு வாகன திறன், பகுதியளவு சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்பு திறன் கொண்ட அதி பாரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இது உருசியாவின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள சோவியத் கால ஆர்-36எம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை.
ஏவுகணை அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 2023 இல் போர் சேவையில் நுழைந்ததுடன், இது உலகின் மிக நீண்ட தூர, மிகவும் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பாகும்.
ஏவுகணை அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 2023 இல் போர் சேவையில் நுழைந்ததுடன், இது உலகின் மிக நீண்ட தூர, மிகவும் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பாகும்.





