ஐ.என்.எஸ். சுனைனா
ரோந்துக் கப்பல்கள் · INS Sunayna
உற்பத்தியாளர்Goa Shipyard Limited
ஐஎன்எஸ் சுனைனா என்பது இந்தியக் கடற்படையின் இரண்டாவது சார்யு வகை ரோந்துக் கப்பலாகும். கோவா சிப்யாட் லிட் என்ற நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டு, கொச்சித் துறைமுகத்தில் 15 அக்டோபர் 2013-இல் கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல், கடலோர ரோந்து, தொலைகரை உடைமைகளின் காவல், பெருங்கடல் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகிய பணிகளைச் செய்கிறது. 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடும் இதில் எட்டு அதிகாரிகள் மற்றும் 108 கடற்படை வீரர்கள் பணியாற்றுவர்கள். இதில் உலங்கூர்தி, அதிநவீன தகவல்தொடர்புச் சாதனங்கள் முதலியவை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், போர்க் காலங்களிலும் பயன்படுத்தலாம்.







