உலக இராணுவ வலிமை
← வான் குண்டுகள்
ஜிபியு-57ஏ/பி எம்ஓபி
Unknown authorUnknown author · Public domain · Wikimedia Commons

ஜிபியு-57ஏ/பி எம்ஓபி

வான் குண்டுகள் · GBU-57A/B MOP

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்Boeing
ஜிபியு-57 தொடர் எம்ஓபி (GBU-57A/B MOP, Massive Ordnance Penetrator ) என்பது 30,000-pound (14,000 kg) எடையுள்ள, 20.5 அடி நீளம் (6.2 மீ) கொண்ட வெடிகுண்டாகும். இது பதுங்குக் குழிகள் உள்ளிட்ட தரையடி இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இது போயிங் நிறுவனத்தால் ஐக்கிய அமெரிக்க வான்படைக்காக (USAF) உருவாக்கபட்டது. பிஎல்யு-127 வெடிகுண்டானது செல்லிங்காட்டி பொறுத்தபட்டது. ஜிபியு-57 குண்டில் ஏழு வகைகள் உள்ளன. அதன் அளவு, எடை போன்றவற்றின் காரணமாக, ஜிபியு-57 எம்ஓபி குண்டை பி-2 ஸ்பிரிட் தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்தியால் மட்டுமே கொண்டு செல்ல முடியும். இருப்பினும் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரெசில் ஆரம்பத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன.
ஜிபியு-57 எம்ஓபி குண்டானது போரில் முதன் முதலில் 2025 சூன் 22 அன்று பயன்படுத்தபட்டது. ஏழு பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள் ஈரானில் தரைக்கடியில் ஆழத்தில் செயல்பட்டு வந்த போர்டோ யுரேனியம் செறிவூட்டல் ஆலை மற்றும் நடான்ஸ் அணுசக்தி தளம் ஆகியவற்றின் மீது பதினான்கு ஜிபியு-57 குண்டுகள் செலுத்தபட்டு சிதைக்கபட்டன.
இந்தக் குண்டு முந்தைய 5,000-pound (2,300 kg) எடை கொண்ட யு.எஸ்.ஏ.எப் பதுங்கு குழி தகர்ப்பிகள் ஜிபியு-28 மற்றும் ஜிபியு-37 போன்றவற்றை விட மிகப் பெரியது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

எடை
13.6 t
நீளம்
6.20 m
அறிமுக ஆண்டு
2011
சேவையில் இணைந்த ஆண்டு
2011

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q1813267