உலக இராணுவ வலிமை
← தாக்குதல் துப்பாக்கிகள்
ஏகே-47
Allatur · CC BY-SA 3.0 · Wikimedia Commons

ஏகே-47

தாக்குதல் துப்பாக்கிகள் · AK-47

தோற்ற நாடு Soviet Union
ஏகே-47 (Ak-47, 1947 இன் ஆட்டோமெட் கலாசுனிக்கோவ் என்பதன் சுருக்கமே ஏகே47 தானியங்கி துப்பாக்கி ஆகும்) 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது.
ஒன்று நிலையான பிடியுடன் (Fixed Stock) கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் (Metal shoulder stock) தயாரிக்கப்பட்டது.
இந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சுடுகலனாக (Carbine) அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டது.
இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே.
இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்றபின் பயன்பாட்டுக்கு வந்தது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

எடை
4.30 kg
நீளம்
0.87 m
தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
80,000,000
அறிமுக ஆண்டு
1947
சேவையில் இணைந்த ஆண்டு
1949

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q37116